அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1 | |
| 2 | அடைப்பும் திறப்பும் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு ! முத்தொள்ளாயிரம் > சேரன் > அடைப்பும் திறப்பும் > பாடல்: 2 | |
| 3 | இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3 | |
| 4 | முடிந்ததும் முடியாததும் கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல் ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > முடிந்ததும் முடியாததும் > பாடல்: 4 | |
| 5 | பழிக்காப்பு வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என! முத்தொள்ளாயிரம் > சேரன் > பழிக்காப்பு > பாடல்: 5 | |
| 6 | கனவுப் புணர்ச்சி புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு! முத்தொள்ளாயிரம் > சேரன் > கனவுப் புணர்ச்சி > பாடல்: 6 | |
| 7 | நெஞ்சு விடு துாது கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை காணிய சென்றவென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > நெஞ்சு விடு துாது > பாடல்: 7 | |
| 8 | வருவதும் போவதும் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வருவதும் போவதும் > பாடல்: 8 | |
| 9 | காணாப் பேச்சு வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென் றருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம் உண்டா யிருக்கஅங் ஓண்தொடியாள் மற்றவனைக் கண்டாள் ஒழிந்தாள் கலாம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9 | |
| 10 | வஞ்சப் புகழ்ச்சி இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்! சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோபெரிது! முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சப் புகழ்ச்சி > பாடல்: 10 | |
| 11 | காதல் நோய் காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென் நெஞ்சங் களங்கொண்டநோய்! முத்தொள்ளாயிரம் > சேரன் > காதல் நோய் > பாடல்: 11 | |
| 12 | உலக இயல்பு மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால் உலகங் கிடந்த இயல்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > உலக இயல்பு > பாடல்: 12 | |
| 13 | அணையா நெருப்பு நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிந் புகலுங் களியானைப் புழியர் கோக் கோதைக் கழலுமென் நெஞ்சங் கிடந்து! முத்தொள்ளாயிரம் > சேரன் > அணையா நெருப்பு > பாடல்: 13 | |
| 14 | சேர நாடு அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினம்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு முத்தொள்ளாயிரம் > சேரன் > சேர நாடு > பாடல்: 14 | |
| 15 | வஞ்சி வளம் களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட்-துளிகலந்து ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே பும்புனல் வஞ்சி அகம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சி வளம் > பாடல்: 15 | |
| 16 | வானகமும் வையகமும் வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர்-வானத்து மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > வானகமும் வையகமும் > பாடல்: 16 | |
| 17 | உய்யும் வழி பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > உய்யும் வழி > பாடல்: 17 | |
| 18 | நரியினமும் வண்டினமும் அரும்பவிழ் தார்க் கோதை அரசெறிந்த வெள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்-சுரும்பொடு வண்டாடு பக்கமு முண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு! முத்தொள்ளாயிரம் > சேரன் > நரியினமும் வண்டினமும் > பாடல்: 18 | |
| 19 | குடையோ? திங்களோ? வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப் பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை! முத்தொள்ளாயிரம் > சேரன் > குடையோ? திங்களோ? > பாடல்: 19 | |
| 20 | யானை நாவாய் அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற்-பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான் காய்சினதேற் கோதை களிறு! முத்தொள்ளாயிரம் > சேரன் > யானை நாவாய் > பாடல்: 20 | |
| 21 | பூழியன் போர்க்களம் மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடக்கை வாங்கித்-துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை கண்ணுற்று வீழந்தார் களம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > பூழியன் போர்க்களம் > பாடல்: 21 | |
| 22 | சேரன் சினந்தால்! கரிபர்ந்து எங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையும் கூடி-எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > சேரன் சினந்தால்! > பாடல்: 22 | |
| 23 | வேலைப் பழித்தால் வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறியலாகா கிடந்தனவே-போரின் முகையவிழ்த்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வேலைப் பழித்தால் > பாடல்: 23 | |
| 24 | பெரும் பழி திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணீரக் காணக் கதவு! முத்தொள்ளாயிரம் > சோழன் > பெரும் பழி > பாடல்: 24 |