தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | எழுதி, சரி பார்த்து, கற்று, கண்டு, அதன் படி நிற்றல் எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப் பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை. தனிப்பாடல் திரட்டு > கற்றல் > பாடல்: 1 | |
| 2 | பல பசுக்கள் கொண்ட ஒரு தொழுவினில் ஒரு கன்றானது எப்படி தன் தாயைக் கண்டு அணுகுமோ, அதுபோல நம் வினை! பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில் பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில் எல்லாரும் செய்வினை யாலே. சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > வினை > பாடல்: 2 | |
| 3 | நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையது தூது மதுரை துவரை கடையிடைமுன் ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ நகர்ஆ யிழையார் நகை. தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3 | |
| 4 | கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் யார்? அண்டின பேரைக் கெடுப்போரும் ஒன்றுபத் தாய்முடிந்து குண்டணி சொல்லும் குடோரிகளும் கொலையே நிதம்செய் வண்டரைச் சேர்த்து இன்ப சல்லாபம் பேசும்மறையவரும் சண்டிப் பயல்களுமே கலிகாலத்தில் தாட்டிகரே! முத்துச் சுப்பையர் தனிப்பாடல் திரட்டு > கலிகால ஆற்றல் > பாடல்: 4 | |
| 5 | பகட்டு! விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பகட்டு! > பாடல்: 5 | |
| 6 | யாருக்கு எது எளிது? வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > எளிது > பாடல்: 6 |
| ">பாடல் எண் |
|---|