கொடிக்கவி | KodiKavi | full

கொடிக்கவி | KodiKavi | full
பாடல் எண் பாடல் Verse
0
1 ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 1

2 பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 2

3 வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 3

4 அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 4

5 அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

கொடிக் கவி > நூல் நுவலும் பொருள் > பாடல்: 5

மொத்த பாடல்கள்: 5

முன்   முகப்பு