திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | கருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம் தருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத் திருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள் ஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம் திருமுறைகண்ட புராணம் > காப்பு > பாடல்: 0 | |
| 1 | உலகமகிழ் தருசைய மீது தோன்றி ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின் திலகமென விளங்குமணி மாடஆரூர் தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி அலகில்புகழ் பெறுராசராச மன்னன் அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர் இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன் றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1 | |
| 2 | கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர் கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே நையுமனத் தினனாகி இருக்குங் காலை நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால் வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 2 | |
| 3 | வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன் கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும் உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 3 | |
| 4 | எம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன இறைஞ்சிடவும் அமுதுசெயா திருப்பக்கண்டு வெம்பியுளம் ஏதோனுந் தவறிங் குண்டோ வேழமுகனே அடியேன் நிவேதித் திட்ட பம்பமுதம் உண்ணாத தென்னை என்று பரிந்துதலை தனைமோதப் புகுங்கால் எம்மான் நம்பிபொறு எனத்தடுத்தவ் வமுத மெல்லாம் நன்கருந்த உவந்து நம்பி நவில்வதானான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 4 | |
| 5 | எந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில் எங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே சந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித் தரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும் அந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன் அன்றது போல மற்றை நாளும் விந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி மேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 5 | |
| 6 | செல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ் சிவனளித்த மதகரிக்குச் சிந்தைகூர்ந்து நல்லபுக ழுடையநம்பி யாண்டார்நம்பி நண்பினொடு நிவேதிப்பான் மதுரமிக்க எல்லையில்வா ழைக்கனிதேன் அவலோ டப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்கஎன்றே மல்லல்மிகு சேனையுடன் இராசராச மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 6 | |
| 7 | ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல் அகல்சூழ பதின்காத அகல எல்லை மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும் வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப் பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன் பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப் பொழுதே நிவேதிக்க என்று சொன்னான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 7 | |
| 8 | நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா நன்றுனதுபணி என்ன அருளால் உன்னித் தும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு தொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக் கம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக் கருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட இம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த எலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 8 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 9 | புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம் புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு வேதியனே கேள் என்று விளம்புவான் மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர் செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 9 | |
| 10 | அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை நம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர் செந்தமிழ்கள் இருந்தஇடம் அன்பருள்ளோர் செய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய் அந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை மகிழ்ந்தாளும் அந்நெறியை வழாதெனுக்குத் தந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித் தந்திமுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 10 | |
| 11 | சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 11 | |
| 12 | வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும் கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோலமலர்க் கைகள்அடையாளமாகச் சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ் சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார் திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 12 | |
| 13 | கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம் மண்டுபெருங் காதலுடன் சொல்லிஅந்த வண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார் கண்டபொரு மந்திரமே மூவர் பாடல் கைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல் எண்டிசையுஞ் சிவனருளைப் பெருதற்காக இம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 13 | |
| 14 | சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும் தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில் பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும் தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப் பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம் பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 14 | |
| 15 |