பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi | full |
| 21 | பூழியன் போர்க்களம்
மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடக்கை வாங்கித்-துயருழந்து புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை கண்ணுற்று வீழந்தார் களம்! முத்தொள்ளாயிரம் > சேரன் > பூழியன் போர்க்களம் > பாடல்: 21
| |
| 22 | சேரன் சினந்தால்!
கரிபர்ந்து எங்கும் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையும் கூடி-எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > சேரன் சினந்தால்! > பாடல்: 22
| |
| 23 | வேலைப் பழித்தால்
வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து ஊரறியலாகா கிடந்தனவே-போரின் முகையவிழ்த்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வேலைப் பழித்தால் > பாடல்: 23
| |
| 24 | பெரும் பழி
திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக் கண்ணீரக் காணக் கதவு! முத்தொள்ளாயிரம் > சோழன் > பெரும் பழி > பாடல்: 24
| |
| 25 | கானல் நீர்
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை யெருகென்றால் அன்னை- அதுபோய் விளைந்தவா இன்று! வியன் கானல் வெண்தேர்த் துலங்குநீர் மாமருட்டி அற்று! முத்தொள்ளாயிரம் > சோழன் > கானல் நீர் > பாடல்: 25
| |
| 26 | கண்ணும் கயலும்
சுடரிலைவேற் சோழன் தன் பாடலம் ஏறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத்- தொடர்புடைய நீர் வலையிற் கயல்போற் பிறழுமே சாலேக வாயில்தொறுங் கண்! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் கயலும் > பாடல்: 26
| |
| 27 | தேரையும் பாவையும்
அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும் என்னை அழியுஞ்சொற் சொல்லுவர்-நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்தேர் வளவன் திறத்து! முத்தொள்ளாயிரம் > சோழன் > தேரையும் பாவையும் > பாடல்: 27
| |
| 28 | நீரும் நெருப்பும்
அலங்குதார்ச் செம்பியன் ஆடெழில்தோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும்- நலந்தொலைந்து பீர்மேற் கொளல் உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு! முத்தொள்ளாயிரம் > சோழன் > நீரும் நெருப்பும் > பாடல்: 28
| |
| 29 | நாணும் நலனும்
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற- யாமத் திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சோழன் > நாணும் நலனும் > பாடல்: 29
| |
| 30 | கனவிலும் இழந்தேன்
ஊடல் எனஒன்று தோன்றி அல்ருறூஉங் கூடல் இழந்தேன் கொடியன்னாய்!-நீடெங்கின் பாளையிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று முத்தொள்ளாயிரம் > சோழன் > கனவிலும் இழந்தேன் > பாடல்: 30
| |
| 31 | கண்ணாரக் காணேன்
புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன் கலவி களிமயங்கிக் காணேன் - நிலவியசீர் மண்ணளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணாரக் காணேன் > பாடல்: 31
| |
| 32 | கண்ணும் நாணமும்
கனவினுள் காண்கொடா கண்ணூம் கலந்த நனவினுள் முன்விலக்கு நாணும்-இனவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணும் நாணமும் > பாடல்: 32
| |
| 33 | முறை இதுவோ?
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம் தண்டப் படுவ தடமென்தோள்-கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > முறை இதுவோ? > பாடல்: 33
| |
| 34 | அரசர்க்குரியது
என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம் மன்னன் புன்னாடன் வௌவினான் -என்னே அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள்! முத்தொள்ளாயிரம் > சோழன் > அரசர்க்குரியது > பாடல்: 34
| |
| 35 | காவானோ
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ! மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல்! முத்தொள்ளாயிரம் > சோழன் > காவானோ > பாடல்: 35
| |
| 36 | அறமும் அரசும்
அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி -இறையிறந்த அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன் சென்கோன்மை செந்நின்ற வாறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > அறமும் அரசும் > பாடல்: 36
| |
| 37 | பெண்தன்மை
நீள்நீலத் தாரிவளவன் நின்மேலான் ஆகவும் நாணிமை யின்றி நடத்தியால் - நீள்நிலம் கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப் பெண்தன்மை இல்லை பிடி! முத்தொள்ளாயிரம் > சோழன் > பெண்தன்மை > பாடல்: 37
| |
| 38 | நாரைவிடு தூது
செங்கால் மடநாராய்! தென்னுறந்தை சேநியேல் நின்கால்மேல் ைவைப்பன் என் கையிரண்டும் - நன்பால் கரை உறிஞ்சி மீன் பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய்! முத்தொள்ளாயிரம் > சோழன் > நாரைவிடு தூது > பாடல்: 38
| |
| 39 | கண்ணோட்டம்
வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண் ஆள்வார் கண்ணென் - றிரக்கண்டாய் வாள் உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோள் அழுவம் தோன்றத் தொழுது! முத்தொள்ளாயிரம் > சோழன் > கண்ணோட்டம் > பாடல்: 39
| |
| 40 | வாடைக் காற்றே
பேயோ பெருந்தண் பனிவாடாய்! பெண்பிறந்தா ரேயோ உனக்கிங்க் கிறைக்குடிகள் -நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம் பார்ப் பாய்! முத்தொள்ளாயிரம் > சோழன் > வாடைக் காற்றே > பாடல்: 40
| |
| 41 | வண்டின் தூது
நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீல்முந் தைவந்-தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்! பண்டன்று பட்டினங் காப்பு முத்தொள்ளாயிரம் > சோழன் > வண்டின் தூது > பாடல்: 41
| |
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi | full | 42 | தானையும் யானையும்
தானைகொண் டோடுவ தாய்ந்தன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ-யானை பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது முத்தொள்ளாயிரம் > சோழன் > தானையும் யானையும் > பாடல்: 42
| |
| 43 | சோழ நாடு
காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை-காவலன்தன் கொல்யானை மேலிருந்து கூற்றி சைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு! முத்தொள்ளாயிரம் > சோழன் > சோழ நாடு > பாடல்: 43
| |
| 44 | உறைந்த வளம்
மாலை விலைபகர்வார் கிள்லிக் களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால்-காலையே வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை அகம்! முத்தொள்ளாயிரம் > சோழன் > உறைந்த வளம் > பாடல்: 44
| |
| 45 | குடைச் சிறப்பு
மந்தரங்க் காம்பா மணீவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிலற்றுமே கொற்றப் போர்க் கிள்ளி குடை! முத்தொள்ளாயிரம் > சோழன் > குடைச் சிறப்பு > பாடல்: 45
| |
| 46 | இரே வதித் திருநாள்
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னொ சிலம்பிதன கூடிழந்த வாறு முத்தொள்ளாயிரம் > சோழன் > இரே வதித் திருநாள் > பாடல்: 46
| |
| 47 | மன்னர் மன்னன்
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே பெருந்தண் உறந்தையார் கோ! முத்தொள்ளாயிரம் > சோழன் > மன்னர் மன்னன் > பாடல்: 47
| |
| 48 | ஆற்றலும் அழகும்
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > ஆற்றலும் அழகும் > பாடல்: 48
| |
| 49 | உஞ்சைமுதல் ஈழம்வரை
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > உஞ்சைமுதல் ஈழம்வரை > பாடல்: 49
| |
| 50 | களிறு புறப்பட்டால்
பற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப-ஆற்ற அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு! முத்தொள்ளாயிரம் > சோழன் > களிறு புறப்பட்டால் > பாடல்: 50
| |
| 51 | செம்பியன் போர்க்களம்
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மட்டி-எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம்! முத்தொள்ளாயிரம் > சோழன் > செம்பியன் போர்க்களம் > பாடல்: 51
| |
| 52 | கூகையிள் தாலாட்டு
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரி இளம் செங்காற் குழவி-அரையிரவில் ஊமந்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன் தன் நாமம்பா ராட்டாதார் நாடு! முத்தொள்ளாயிரம் > சோழன் > கூகையிள் தாலாட்டு > பாடல்: 52
| |
| 53 | துளைதொட்ட தேன்
காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > துளைதொட்ட தேன் > பாடல்: 53
| |
| 54 | தாயும் மகளும்
வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோர்!- தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கல்என் பாள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தாயும் மகளும் > பாடல்: 54
| |
| 55 | ஆற்றாமையும் அறியாமையும்
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டங்க்குச் சென்றெவன் நெஞ்சறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > ஆற்றாமையும் அறியாமையும் > பாடல்: 55
| |
| 56 | நானும் இழப்பதா
களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க-அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நானும் இழப்பதா > பாடல்: 56
| |
| 57 | காப்பதா? கவர்வதா?
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் -இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூசல் இனி! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > காப்பதா? கவர்வதா? > பாடல்: 57
| |
| 58 | யானோ எளியேன்?
தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும் வானேற்ற வையகம் எல்லாமால்-யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானோ எளியேன்? > பாடல்: 58
| |
| 59 | பாலும் நீரும்
மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பாலும் நீரும் > பாடல்: 59
| |
| 60 | மானும் மங்கையும்
புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா- இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மானும் மங்கையும் > பாடல்: 60
| |
| 61 | கனவோ? நினைவோ?
களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் தௌியாதே செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என் அலால் யான்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவோ? நினைவோ? > பாடல்: 61
| |
| 62 | கண்கள்
கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம் நனவில் எதிர்விழிக்க நாணும்-புனையிழாய்! என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன் தண்கண் அருள்பெறுமா தான்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கண்கள் > பாடல்: 62
| |
| 63 | வளைக்கள் வன்
தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி களையினும் என் கைதிறந்து காட்டேன் - வளைகொடுப்போம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வளைக்கள் வன் > பாடல்: 63
| |
| 64 | கனவும் இழந்தேன்
ஓராற்றல் எண்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற- வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழ்ந்திருந்த வாறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > கனவும் இழந்தேன் > பாடல்: 64
| |
| பாடல் எண் | பாடல் | Verse |
| 65 | குவளையின் தவம்
கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > குவளையின் தவம் > பாடல்: 65
| |
| 66 | யார் அறிவார்?
அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து-மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யார் அறிவார்? > பாடல்: 66
| |
| 67 | தோளும் துணைவனும்
கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடும் என் தோள்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோளும் துணைவனும் > பாடல்: 67
| |
| 0 | |
| 68 | முத்துத் துளிகள்
இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் கொற்கையே யல்ல படுவது-கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம் கருதியார் கண்ணும் படும்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முத்துத் துளிகள் > பாடல்: 68
| |
| 69 | வள்ளைப் பாட்டு
கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ? யானும் ஓர் அம்மனைக் காவல் உளேன்! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வள்ளைப் பாட்டு > பாடல்: 69
| |
| 70 | தோழிவிடு தூது
என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படாவாறே யுரை! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தோழிவிடு தூது > பாடல்: 70
| |
| 71 | வாடைவிடு தூது
மாறாடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளீர்வாடாய்! சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடைவிடு தூது > பாடல்: 71
| |
| 72 | பெண்ணும் பிடியும்
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயான் நின்னை யிரப்பல் - கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகதலுமெஞ் சாலேகம் சார நட! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பெண்ணும் பிடியும் > பாடல்: 72
| |
| 73 | பிடியும் பெண்மையும்
எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் - உலா அங்கால் பைய நடக்கவுந் தோற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > பிடியும் பெண்மையும் > பாடல்: 73
| |
| 1 | பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 1
| |
| 74 | மாதும் மாவும்
போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ - கூர்வேல் மதிவெங் களியானை மாறன் தன் மார்பங் கதவங்கொண் டியாமுந் தொழ! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மாதும் மாவும் > பாடல்: 74
| |
| 2 | ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 2
|
| 75 | வழுதியும் பூவையும்
ஆடுகோ! சூடுகோ! ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ -நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு! முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வழுதியும் பூவையும் > பாடல்: 75
| |
| 3 | கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 3
| |