சிவஞானபோதம் | Siva Gnana Botham | full

சிவஞானபோதம் | Siva Gnana Botham | full
பாடல் எண் பாடல் Verse
0 தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார்--- தம்மை
உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்

சிவஞானபோதம் > 1.3 அவையடக்கம் > பாடல்: 0

1 அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.1 முதல் சூத்திரம் > பாடல்: 1

2 அவையே தானே ஆய், இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.2 இரண்டாம் சூத்திரம் > பாடல்: 2

3 உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.3 மூன்றாம் சூத்திரம் > பாடல்: 3

4 அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.1 நான்காம் சூத்திரம் > பாடல்: 4

5 விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே

சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.2 ஐந்தாம் சூத்திரம் > பாடல்: 5

6 உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே

சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.3 ஆறாம் சூத்திரம் > பாடல்: 6

7 யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.1 ஏழாம் சூத்திரம் > பாடல்: 7

8 ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.2 எட்டாம் சூத்திரம் > பாடல்: 8

9 ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.3 ஒன்பதாம் சூத்திரம் > பாடல்: 9

10 அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.1 பத்தாம் சூத்திரம் > பாடல்: 10

11 காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே

சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.2 பதினொறாம் சூத்திரம் > பாடல்: 11

12 செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே

சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.3 பனிரண்டாம் சூத்திரம் > பாடல்: 12

மொத்த பாடல்கள்: 12

முன்   முகப்பு