சிவவாக்கியம் | SivaVaakkiyam | full |
| 2 | ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2
| |
| 3 | ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. சிவவாக்கியம் > சரியை விலக்கல் > பாடல்: 3
| |
| 4 | உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 4
| |
திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full | 5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. சிவவாக்கியம் > தேகநிலை > பாடல்: 5
| |
| 6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6
| |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7
| |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8
| |
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9
| |
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10
| |
மொத்த பாடல்கள்: 101 முன் முகப்பு