சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | காப்பு மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர் முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும் மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங் கடம்பொழி முக்கட் களிறு. சோமேசர் முதுமொழி வெண்பா > காப்பு > பாடல்: 0 | |
| 1 | 1. கடவுள் வாழ்த்து சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற் சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில் அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு சோமேசர் முதுமொழி வெண்பா > கடவுள் வாழ்த்து > பாடல்: 1 | |
| 2 | 2. வான்சிறப்பு நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன் துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். சோமேசர் முதுமொழி வெண்பா > வான்சிறப்பு > பாடல்: 2 | |
| 3 | 3. நீத்தார் பெருமை அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச் சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். சோமேசர் முதுமொழி வெண்பா > நீத்தார் பெருமை > பாடல்: 3 | |
| 4 | 4. அறன்வலியுறுத்தல் தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந் தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். சோமேசர் முதுமொழி வெண்பா > அறன்வலியுறுத்தல் > பாடல்: 4 | |
| 5 | 5. இல்வாழ்க்கை இல்வாழ் தரும னியற்சந் திரசேனன் தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. சோமேசர் முதுமொழி வெண்பா > இல்வாழ்க்கை > பாடல்: 5 | |
| 6 | 6. வாழ்கைத்துணை நலம் மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள் தூய அனுசுயை சோமேசா - மேவுபிற தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. சோமேசர் முதுமொழி வெண்பா > வாழ்கைத்துணை நலம் > பாடல்: 6 | |
| 7 | 7. புதல்வரைபெறுதல் பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ் சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில் தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. சோமேசர் முதுமொழி வெண்பா > புதல்வரைபெறுதல் > பாடல்: 7 | |
| 8 | 8. அன்புடைமை தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூசல் தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > அன்புடைமை > பாடல்: 8 | |
| 9 | 9. விருந்தோம்பல் பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற் சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. சோமேசர் முதுமொழி வெண்பா > விருந்தோம்பல் > பாடல்: 9 | |
| 10 | 10. இனிவை கூறல் இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய் துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. சோமேசர் முதுமொழி வெண்பா > இனிவை கூறல் > பாடல்: 10 | |
| 11 | 11. செய்நன்றி அறிதல் பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல் சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த் கொள்வர் பயன்தெரி வார். சோமேசர் முதுமொழி வெண்பா > செய்நன்றி அறிதல் > பாடல்: 11 | |
| 12 | 12. நடுவு நிலைமை வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச் சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற் சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. சோமேசர் முதுமொழி வெண்பா > நடுவு நிலைமை > பாடல்: 12 | |
| 13 | 13. அடக்கமுடைமை எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச் சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால் யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால் சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. சோமேசர் முதுமொழி வெண்பா > அடக்கமுடைமை > பாடல்: 13 | |
| 14 | 14. ஓழுக்கமுடைமை தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன் துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின் ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். சோமேசர் முதுமொழி வெண்பா > ஓழுக்கமுடைமை > பாடல்: 14 | |
| 15 | 15. பிறனில் விழையாமை ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான் தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். சோமேசர் முதுமொழி வெண்பா > பிறனில் விழையாமை > பாடல்: 15 | |
| 16 | 16. பொறையுடைமை ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார் சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு பொன்றுந் துணையும் புகழ். சோமேசர் முதுமொழி வெண்பா > பொறையுடைமை > பாடல்: 16 | |
| 17 | 17. அழுக்காறாமை அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற் துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம் அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. சோமேசர் முதுமொழி வெண்பா > அழுக்காறாமை > பாடல்: 17 | |
| 18 | 18. வெஃகாமை நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில் நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக் குற்றமு மாங்கே தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > வெஃகாமை > பாடல்: 18 | |
| 19 | 19. புறங்கூறாமை கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தோறா தவர். சோமேசர் முதுமொழி வெண்பா > புறங்கூறாமை > பாடல்: 19 | |
| 20 | 20. பயனில சொல்லாமை சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற் பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். சோமேசர் முதுமொழி வெண்பா > பயனில சொல்லாமை > பாடல்: 20 | |
| 21 | 21. தீவினையச்சம் குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல் சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான் மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. சோமேசர் முதுமொழி வெண்பா > தீவினையச்சம் > பாடல்: 21 | |
| 22 | 22. ஒப்புரவறிதல் பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந் தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம் நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை செய்யா தமைகலா வாறு. சோமேசர் முதுமொழி வெண்பா > ஒப்புரவறிதல் > பாடல்: 22 | |
| 23 | 23. ஈகை மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன் தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில் இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு. சோமேசர் முதுமொழி வெண்பா > ஈகை > பாடல்: 23 | |
| 24 | 24. புகழ் போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத் தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன் ஈத லிசைபட வாழ்த லதுவல்லது ஊதிய மில்லை யுயிர்க்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > புகழ் > பாடல்: 24 | |
| 25 | 25. அருளுடைமை மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன் சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார் அற்றார்மற் றாத லரிது. சோமேசர் முதுமொழி வெண்பா > அருளுடைமை > பாடல்: 25 | |
| 26 | 26. புலால் மறுத்தல் மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான் துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான் எங்ஙனம் ஆளும் அருள். சோமேசர் முதுமொழி வெண்பா > புலால் மறுத்தல் > பாடல்: 26 | |
| 27 | 27. தவம் ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந் தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில் தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது. சோமேசர் முதுமொழி வெண்பா > தவம் > பாடல்: 27 | |
| 28 | 28. கூடாவொழுக்கம் மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி தூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின் வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. சோமேசர் முதுமொழி வெண்பா > கூடாவொழுக்கம் > பாடல்: 28 | |
| 29 | 29. கள்ளாமை நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான் தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால் எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங் கள்ளமை காக்கதன் நெஞ்சு. சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளாமை > பாடல்: 29 | |
| 30 | 30. வாய்மை பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற் பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். சோமேசர் முதுமொழி வெண்பா > வாய்மை > பாடல்: 30 | |
| 31 | 31. வெகுளாமை பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார் தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. சோமேசர் முதுமொழி வெண்பா > வெகுளாமை > பாடல்: 31 | |
| 32 | 32. இன்னா செய்யாமை பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத் துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப் பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். சோமேசர் முதுமொழி வெண்பா > இன்னா செய்யாமை > பாடல்: 32 | |
| 33 | 33. கொல்லாமை வேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான் சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர் தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீங்கும் வினை. சோமேசர் முதுமொழி வெண்பா > கொல்லாமை > பாடல்: 33 | |
| 34 | 34. நிலையாமை. ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத் தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில் நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை. சோமேசர் முதுமொழி வெண்பா > நிலையாமை > பாடல்: 34 | |
| 35 | 35. துறவு கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந் தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில் இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகு மற்றும் பெயர்த்து. சோமேசர் முதுமொழி வெண்பா > துறவு > பாடல்: 35 | |
| 36 | 36. மெய்யுணர்தல். காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச் சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற் காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன் நாமங் கெடக்கெடு நோய். சோமேசர் முதுமொழி வெண்பா > மெய்யுணர்தல் > பாடல்: 36 | |
| 37 | 37. அவாவறுத்தல் தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது தூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். சோமேசர் முதுமொழி வெண்பா > அவாவறுத்தல் > பாடல்: 37 | |
| 38 | 38. ஊழ் முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந் துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற் பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை. சோமேசர் முதுமொழி வெண்பா > ஊழ் > பாடல்: 38 | |
| 39 | 39. இறைமாட்சி. பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன் சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற் செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ் தங்கு முலகு. சோமேசர் முதுமொழி வெண்பா > இறைமாட்சி > பாடல்: 39 | |
| 40 | 40. கல்வி சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். சோமேசர் முதுமொழி வெண்பா > கல்வி > பாடல்: 40 | |
| 41 | 41. கல்லாமை மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந் துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின் மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. சோமேசர் முதுமொழி வெண்பா > கல்லாமை > பாடல்: 41 | |
| 42 | 42. கேள்வி ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற் கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு ஒற்கத்தி னூற்றாந் துணை. சோமேசர் முதுமொழி வெண்பா > கேள்வி > பாடல்: 42 | |
| 43 | 43. அறிவுடைமை அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின் துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம் அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவது அஞ்ச லறிவார் தொழில். சோமேசர் முதுமொழி வெண்பா > அறிவுடைமை > பாடல்: 43 | |
| 44 | 44. குற்றங்கடிதல் ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச் சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின் வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். சோமேசர் முதுமொழி வெண்பா > குற்றங்கடிதல் > பாடல்: 44 | |
| 45 | 45. பெரியோரைத் துணைகோடல் எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரே சுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்த அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். சோமேசர் முதுமொழி வெண்பா > பெரியோரைத் துணைகோடல் > பாடல்: 45 | |
| 46 | 46. சிற்றினஞ் சேராமை அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள் சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும் நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில். சோமேசர் முதுமொழி வெண்பா > சிற்றினஞ் சேராமை > பாடல்: 46 | |
| 47 | 47. தெரிந்து செயல்வகை. சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால் ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார். சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து செயல்வகை > பாடல்: 47 | |
| 48 | 48. வலியறிதல் சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத் துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும் உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். சோமேசர் முதுமொழி வெண்பா > வலியறிதல் > பாடல்: 48 | |
| 49 | 49. காலமறிதல் வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு தூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > காலமறிதல் > பாடல்: 49 | |
| 50 | 50. இடனறிதல் காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற் தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின் ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின். சோமேசர் முதுமொழி வெண்பா > இடனறிதல் > பாடல்: 50 | |
| 51 | 51. தெரிந்து தௌிதல் தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான் சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல் தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து தௌிதல் > பாடல்: 51 | |
| 52 | 52. தெரிந்து வினையாடல் தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான் தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில் எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர். சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து வினையாடல் > பாடல்: 52 | |
| 53 | 53. சுற்றந்தழால் ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன் சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. சோமேசர் முதுமொழி வெண்பா > சுற்றந்தழால் > பாடல்: 53 | |
| 54 | 54. பொச்சாவாமை முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே துப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால் இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. சோமேசர் முதுமொழி வெண்பா > பொச்சாவாமை > பாடல்: 54 | |
| 55 | 55. செங்கோன்மை மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான் சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங் குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். சோமேசர் முதுமொழி வெண்பா > செங்கோன்மை > பாடல்: 55 | |
| 56 | 56. கொடுங்கோன்மை ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார் துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம் அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. சோமேசர் முதுமொழி வெண்பா > கொடுங்கோன்மை > பாடல்: 56 | |
| 57 | 57. வெருவந்த செய்யாமை வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன் தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக் கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி யாங்கே கெடும். சோமேசர் முதுமொழி வெண்பா > வெருவந்த செய்யாமை > பாடல்: 57 | |
| 58 | 58. கண்ணேட்டம் மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத் தோலா விடமுண்டாய் சோமேசா - சால ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. சோமேசர் முதுமொழி வெண்பா > கண்ணேட்டம் > பாடல்: 58 | |
| 59 | 59. ஓற்றாடல் வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய் சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின் எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில். சோமேசர் முதுமொழி வெண்பா > ஓற்றாடல் > பாடல்: 59 | |
| 60 | 60. ஊக்கமுடைமை வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த் துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம் பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். சோமேசர் முதுமொழி வெண்பா > ஊக்கமுடைமை > பாடல்: 60 | |
| 61 | 61. மடியின்மை பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின் மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > மடியின்மை > பாடல்: 61 | |
| 62 | 62. ஆள்வினையுடைமை கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே தோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும் முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். சோமேசர் முதுமொழி வெண்பா > ஆள்வினையுடைமை > பாடல்: 62 | |
| 63 | 63. இடுக்கண்ணழியாமை என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார் துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். சோமேசர் முதுமொழி வெண்பா > இடுக்கண்ணழியாமை > பாடல்: 63 | |
| 64 | 64. அமைச்சு கால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித் தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப் பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லதமைச்சு. சோமேசர் முதுமொழி வெண்பா > அமைச்சு > பாடல்: 64 | |
| 65 | 65. சொல்வன்மை நித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந் துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும் ஆக்கமும் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு. சோமேசர் முதுமொழி வெண்பா > சொல்வன்மை > பாடல்: 65 | |
| 66 | 66. வினைத்தூய்மை தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித் துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும் எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று. சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்தூய்மை > பாடல்: 66 | |
| 67 | 67. வினைத்திட்பம் செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான் துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்திட்பம் > பாடல்: 67 | |
| 68 | 68. வினைச்செயல்வகை வெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித் துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். சோமேசர் முதுமொழி வெண்பா > வினைச்செயல்வகை > பாடல்: 68 | |
| 69 | 69. தூது தன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதி துன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும் இறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்கு உறுதி பயப்பதாம் தூது. சோமேசர் முதுமொழி வெண்பா > தூது > பாடல்: 69 | |
| 70 | 70. மன்னரைச்சேர்ந்தொழுகல் மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > மன்னரைச்சேர்ந்தொழுகல் > பாடல்: 70 | |
| 71 | 71. குறிப்பறிதல் அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத் துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில் ஐயப் படாஅ தகத்த துணர்வானை தெய்வத்தோ டொப்பக் கொளல். சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 71 | |
| 72 | 72. அவையறிதல் ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச் சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற் கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச் சொற்றெறிதல் வல்லா ரகத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > அவையறிதல் > பாடல்: 72 | |
| 73 | 73. அவையஞ்சாமை வாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச் சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. சோமேசர் முதுமொழி வெண்பா > அவையஞ்சாமை > பாடல்: 73 | |
| 74 | 74. நாடு மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான் தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. சோமேசர் முதுமொழி வெண்பா > நாடு > பாடல்: 74 | |
| 75 | 75. அரண் வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத் தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்க ணில்லா தரண். சோமேசர் முதுமொழி வெண்பா > அரண் > பாடல்: 75 | |
| 76 | 76. பொருள் செயல்வகை உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற் றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. சோமேசர் முதுமொழி வெண்பா > பொருள் செயல்வகை > பாடல்: 76 | |
| 77 | 77. படைமாட்சி நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின் ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும். சோமேசர் முதுமொழி வெண்பா > படைமாட்சி > பாடல்: 77 | |
| 78 | 78. படைசெருக்கு மன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந் துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங் கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது. சோமேசர் முதுமொழி வெண்பா > படைசெருக்கு > பாடல்: 78 | |
| 79 | 79. நட்பு வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார் தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பு > பாடல்: 79 | |
| 80 | 80. நட்பாராய்தல் போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான் தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பாராய்தல் > பாடல்: 80 | |
| 81 | 81. பழைமை இல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார் தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். சோமேசர் முதுமொழி வெண்பா > பழைமை > பாடல்: 81 | |
| 82 | 82. தீநட்பு ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான் தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால் ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். சோமேசர் முதுமொழி வெண்பா > தீநட்பு > பாடல்: 82 | |
| 83 | 83. கூடாநட்பு. தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள் தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால் நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை யுணரப் படும். சோமேசர் முதுமொழி வெண்பா > கூடாநட்பு > பாடல்: 83 | |
| 84 | 84. பேதைமை வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித் துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம் பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில். சோமேசர் முதுமொழி வெண்பா > பேதைமை > பாடல்: 84 | |
| 85 | 85. புல்லறிவாண்மை இல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான் தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால் ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய். சோமேசர் முதுமொழி வெண்பா > புல்லறிவாண்மை > பாடல்: 85 | |
| 86 | 86. இகல் எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர் துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்த இகலானா மின்னாத வெல்லா நகலானா நன்னை மென்னுஞ் செருக்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > இகல் > பாடல்: 86 | |
| 87 | 87. பகைமாட்சி ஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான் தூநறும்பூ வாளியான் சோமேசா - மான வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார் மென்மேக பகை. சோமேசர் முதுமொழி வெண்பா > பகைமாட்சி > பாடல்: 87 | |
| 88 | 88. பகைதிறந்தௌிதல் நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ் சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும் வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. சோமேசர் முதுமொழி வெண்பா > பகைதிறந்தௌிதல் > பாடல்: 88 | |
| 89 | 89. உட்பகை மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந் தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் உட்பகை யுள்ளதாங் கேடு. சோமேசர் முதுமொழி வெண்பா > உட்பகை > பாடல்: 89 | |
| 90 | 90. பெரியாரைப்பிழையாமை கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால் துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும் ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். சோமேசர் முதுமொழி வெண்பா > பெரியாரைப்பிழையாமை > பாடல்: 90 | |
| 91 | 91. பெண்வழிச்சேரல் கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான் சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > பெண்வழிச்சேரல் > பாடல்: 91 | |
| 92 | 92. வரைவின் மகளிர் வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும் பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். சோமேசர் முதுமொழி வெண்பா > வரைவின் மகளிர் > பாடல்: 92 | |
| 93 | 93. கள்ளுண்ணாமை தக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம் தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக் களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளுண்ணாமை > பாடல்: 93 | |
| 94 | 94. சூது முற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு சொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம் ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு. சோமேசர் முதுமொழி வெண்பா > சூது > பாடல்: 94 | |
| 95 | 95. மருந்து நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய் சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். சோமேசர் முதுமொழி வெண்பா > மருந்து > பாடல்: 95 | |
| 96 | 96. குடிமை மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார் துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண் வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பிற் றலைபிரித லின்று. சோமேசர் முதுமொழி வெண்பா > குடிமை > பாடல்: 96 | |
| 97 | 97. மானம் அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான் துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின். சோமேசர் முதுமொழி வெண்பா > மானம் > பாடல்: 97 | |
| 98 | 98. பெருமை தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார் தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ் சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > பெருமை > பாடல்: 98 | |
| 99 | 99. சான்றாண்மை வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான் தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும் இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. சோமேசர் முதுமொழி வெண்பா > சான்றாண்மை > பாடல்: 99 | |
| 100 | 100. பண்புடைமை உன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத் துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும் பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று. சோமேசர் முதுமொழி வெண்பா > பண்புடைமை > பாடல்: 100 | |
| 101 | 101. நன்றியில் செல்வம் எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான் சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > நன்றியில் செல்வம் > பாடல்: 101 | |
| 102 | 102. நாணுடைமை. புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான் துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில் நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால் நாண்டுறவார் நாணாள் பவர். சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுடைமை > பாடல்: 102 | |
| 103 | 103. குடிச்செயல்வகை மற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும் இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. சோமேசர் முதுமொழி வெண்பா > குடிச்செயல்வகை > பாடல்: 103 | |
| 104 | 104. உழவு வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால் சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும் உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை. சோமேசர் முதுமொழி வெண்பா > உழவு > பாடல்: 104 | |
| 105 | 105. நல்குரவு நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர் சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால் நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். சோமேசர் முதுமொழி வெண்பா > நல்குரவு > பாடல்: 105 | |
| 106 | 106. இரவு கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத் துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின் இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம் உள்ளு ளுவப்ப துடைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > இரவு > பாடல்: 106 | |
| 107 | 107. இரவச்சம் எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார் துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில் ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு இரவி னிளிவந்த தில். சோமேசர் முதுமொழி வெண்பா > இரவச்சம் > பாடல்: 107 | |
| 108 | 108. கயமை ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின் தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும் ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லாத வர்க்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > கயமை > பாடல்: 108 | |
| 109 | 109. தகையணங்குறுத்தல் வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான் தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின் உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று. சோமேசர் முதுமொழி வெண்பா > தகையணங்குறுத்தல் > பாடல்: 109 | |
| 110 | 110. குறிப்பறிதல் காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின் தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண் உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல் ஒல்லை யுணரப்படும். சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 110 | |
| 111 | 111. புணர்ச்சி மகிழ்தல் மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற் சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில் தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணானுலகு. சோமேசர் முதுமொழி வெண்பா > புணர்ச்சி மகிழ்தல் > பாடல்: 111 | |
| 112 | 112. நலம்புனைந்துரைத்தல் ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய் தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > நலம்புனைந்துரைத்தல் > பாடல்: 112 | |
| 113 | 113. காதற்சிறப்புரைத்தல் கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான் தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால் வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல் அதற்கன்ன ணீங்கு மிடத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > காதற்சிறப்புரைத்தல் > பாடல்: 113 | |
| 114 | 114. நாணுத்துறவுரைத்தல் காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள் சோமநுதற் பரவை சோமேசா - ஆமே கடலென்ன காமமுழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுத்துறவுரைத்தல் > பாடல்: 114 | |
| 115 | 115. அலரறிவுறுத்தல் ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற் கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. சோமேசர் முதுமொழி வெண்பா > அலரறிவுறுத்தல் > பாடல்: 115 | |
| 116 | 116. பிரிவாற்றாமை வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான் சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும் இன்னா தினியார்ப் பிரிவு. சோமேசர் முதுமொழி வெண்பா > பிரிவாற்றாமை > பாடல்: 116 | |
| 117 | 117. படர்மெலிந்திரங்கல் இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது. சோமேசர் முதுமொழி வெண்பா > படர்மெலிந்திரங்கல் > பாடல்: 117 | |
| 118 | 118. கண்விதுப்பழிதல் தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள் சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற் கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > கண்விதுப்பழிதல் > பாடல்: 118 | |
| 119 | 119. பசப்புறு பருவல் கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற் சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில் பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை துற்றா ரெனின். சோமேசர் முதுமொழி வெண்பா > பசப்புறு பருவல் > பாடல்: 119 | |
| 120 | 120. தனிப்படர்மிகுதி பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந் துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை. சோமேசர் முதுமொழி வெண்பா > தனிப்படர்மிகுதி > பாடல்: 120 | |
| 121 | 121. நினைத்தவர் புலம்பல் தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன் துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத் தோவா வரல். சோமேசர் முதுமொழி வெண்பா > நினைத்தவர் புலம்பல் > பாடல்: 121 | |
| 122 | 122. கனவுநிலையுரைத்தல் அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற் சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதெ யினிது. சோமேசர் முதுமொழி வெண்பா > கனவுநிலையுரைத்தல் > பாடல்: 122 | |
| 123 | 123. பொழுதுகண்டிரங்கல் வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். சோமேசர் முதுமொழி வெண்பா > பொழுதுகண்டிரங்கல் > பாடல்: 123 | |
| 124 | 124. உறுப்பு நலனழிதல் ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான் சூதரா வான்மீகி சோமேசா - கோதில் பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். சோமேசர் முதுமொழி வெண்பா > உறுப்பு நலனழிதல் > பாடல்: 124 | |
| 125 | 125. நெஞ்சொடுகிளத்தல் அன்பன் துறப்பவு நாளா யினிதேடித் துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல் பைதனோய் செய்தார்க ணில். சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுகிளத்தல் > பாடல்: 125 | |
| 126 | 126. நிறையழிதல் கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார் தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற் பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை. சோமேசர் முதுமொழி வெண்பா > நிறையழிதல் > பாடல்: 126 | |
| 127 | 127. அவர்வயின் விதும்பல் சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற் சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும் உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன். சோமேசர் முதுமொழி வெண்பா > அவர்வயின் விதும்பல் > பாடல்: 127 | |
| 128 | 128. குறிப்பறிவுறுத்தல் சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத் துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப் பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிவுறுத்தல் > பாடல்: 128 | |
| 129 | 129. புணர்ச்சிவிதும்பல் யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான் தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன் உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. சோமேசர் முதுமொழி வெண்பா > புணர்ச்சிவிதும்பல் > பாடல்: 129 | |
| 130 | 130. நெஞ்சொடுபுலத்தல் விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள் தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும் அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே நீயெமக் காகா தது. சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுபுலத்தல் > பாடல்: 130 | |
| 131 | 131. புலவி கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன் றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து. சோமேசர் முதுமொழி வெண்பா > புலவி > பாடல்: 131 | |
| 132 | 132. புலவிநுணுக்கம் சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர் இந்நீர ராகுதி ரென்று. சோமேசர் முதுமொழி வெண்பா > புலவிநுணுக்கம் > பாடல்: 132 | |
| 133 | 133. ஊடலுவகை காயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத் தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால் ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங் கூடலிற் காணப் படும். சோமேசர் முதுமொழி வெண்பா > ஊடலுவகை > பாடல்: 133 |