நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu | full |
| பாடல் எண் | பாடல் | Verse | |
|---|---|---|---|
| 0 | |||
| 1 | பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் நெஞ்சு விடு தூது > இறைவனியல்பு > பாடல்: 1 | ||
| 2 | என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற் சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப் பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின் பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா உணர்வின் மிசையோ டுலகா யதனைப் புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற் கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத் தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல் வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன் ஆன திறலா ரகந்தைக்கு - மேனி யயர வயர வழிய வழியும் உயிரின் றுயர முரையேன் - வயிரமே நெஞ்சு விடு தூது > உயிரியல்பு > பாடல்: 2 | ||
| 3 | கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும் மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 3 |
| பாடல் எண் | பாடல் | Verse | |
|---|---|---|---|
| 4 | இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 4 | ||
| 0 | 5 | t> |