உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2375
Jiva transcending The tribulations of Tattvas Six times six, Reaches the Nadanta; Ascending still beyond, It encounters darkness of Anava; When that is dispelled, The peerless Divine Jnana dawns; That indeed is Jnana (Bodha) That Nadanta beyond reached.
முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.