தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2381
In Samadhi Jiva with Siva One becomes; In Kalanta, in Nadanta, in Yoganta And in Bodhanta and Siddhanta Is Jnana reached Of Knowledge, the Known and the Knower One uniting.
(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.