திருமந்திரம் | Thirumanthiram

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி ..போதாதி போதமு மாமே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 9 படைத்தல் > பாடல்: 402

She is Manonmani, the ample-bosomed;
Mangali, the ever auspicious;
Varani of elephant form
Arani of haunting forests
Mohini of tempting beauty
Poorani--the Perfect Being,
Cause-Effect conjoint in one
--She, Consciousness beyond Consciousness.

அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 05, 2026