திருமந்திரம் | Thirumanthiram

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு ..மேஉல கோடுயிர் தானே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 9 படைத்தல் > பாடல்: 404

The One alone created the worlds seven;
The One alone spanned the worlds seven;
The One alone survived the worlds seven;
The One alone pervaded body and life.

முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 05, 2026