மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
சிவபுராணம் > பாடல்: 17
Of all that in this world diverse pronounced as truth Is known, Thou art the knowledge sure ! Full certitude ! Precious ambrosia, fountain welling up within ! My Owner Thou ! I can't endure, our Guru, in this changing straitened frame to 'bide. Aran! All Thy saints made true invoke Thee, (85)