திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai |
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .220
திருமுருகாற்றுப்படை > 5. குன்றுதோறு ஆடல் > வேலன்: > பாடல்: 22
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக