10. குற்றமும் தண்டனையும்! பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார். பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி. திணை : பாடாண். துறை : இயன்மொழி. வழிபடு வோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி; வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே; அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ், நெய்தருங் கானல் நெடியோய்! எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
புறநானூறு > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக