27. புலவர் பாடும் புகழ்! பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல். துறை: முதுமொழிக் காஞ்சி. சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன, வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந் தோரை எண்ணுங் காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே: ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக் கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியா தோரையும், அறியக் காட்டித், திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து, வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி; அருளிலர் கொடா அமை வல்லர் ஆகுக; கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.
புறநானூறு > பாடல்: 27
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக