32. பூவிலையும் மாடமதுரையும்! பாடியவர்: கோவூர்கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு. கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? ‘வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக!’ என, மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.
புறநானூறு > பாடல்: 32
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக