Hatching Techniques
Oh my GOD!!! GODஏ தான். விநாயகரும் சரி, அவர் முன் அமர்ந்து வரைந்த ஓவியர் சில்பியும் சரி. புகைப்படம் எடுத்தால் கூட இவ்வளவு நுணுக்கங்கள் கொண்டு வரமுடியுமா தெரியவில்லை. சில்பி சில்பி தான். எல்லாமே கோடுகள் கொண்டு 3Dயில் ஒரு படம் வரைவது என்பது என்றைக்குமே challenge தான். அதை அநாயாசமாக கையாண்டிருக்கிறார் சில்பி.
தென்னாட்டுச் செல்வங்கள் விகடனில் வந்தபோதே, சில்பியின் ஓவியத்திற்காகவே தொடர்ந்து பார்த்தேன், படித்தேன் அந்தக் கட்டுரைகளை. அதனைத் தொகுத்து அவர்களே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள், இப்போது கிடைக்கிறது என்று நண்பர் ஒருவரின் மூலம் அறிந்து, அதனை வாங்கி, felt like one part of life is fulfilled, when I got the books in my hand.
சரி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று (எல்லா கலைஞர்களுக்கும் இருக்கும் போல) யோசித்து முழுமுதற் கடவுளில் இருந்தே தொடக்கம். மதுரை ஊர்த்வ கணபதி. பென்சிலில் rough shapes போட்டு தொடங்கி, ஓரளவிற்கு முழு உருவம் கிடைத்த பிறகு, பேனாவில் details add செய்து. முடிச்சாச்.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
02-May-2024