ஓவியம் - Pen & Ink | வாழ்வியல்

Shan
Img. 27 / 30 - பாடகர் ஜெயச்சந்திரன்

Photo to Sketching

அஆ... என்ற ஆலாபனையில் நம்மைச் சுண்டியிழுத்து, காளிதாசன்... கண்ணதாசன்... என்று பல்லவியிலேயே கட்டிப் போடும் குரலுக்குச் சொந்தக்காரர். மயங்கினேன், சொல்லத் தயங்கினேன், உன் குரலை விரும்பினேன் உயிரே. அதனை ஒரு ஓவியமாக்கினேன் இங்கே.

கோட்டோவிய முயற்சியில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள். எல்லாமே கோடுகள் எனும் போது, light & shades கொஞ்சம் challengingஆக இருந்தது. அதும் போக, முகபாவம், சட்டை மடிப்புகள், அதன் புள்ளிகள் எல்லாம் போட்டு, படத்தை முடிக்கையில், அவரின் 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே' ஒலித்துக் கொண்டிருந்தது.

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
19-Apr-2024

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows