சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே. 47
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1201
Hold Her in your thoughts, Hold Her on your head, Hold Her in your presence Hold Her in Muladhara Hold Her in meditation Undistracted by worldly thoughts, Hold Her in the mystic junction in cranium, And into Samadhi enter.
தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.