உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 25. ஞானாதித்தன் > பாடல்: 1994
The Sound that arises When Sun within dawns Is emanation from Para Nada; The Sounds Five, Vaikhari and rest That to Para Bindu belong Arise in Kalas Five, one in each.
ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்று வதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத் தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலியவாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.