நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று
தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்
சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலா ரகந்தைக்கு - மேனி
யயர வயர வழிய வழியும்
உயிரின் றுயர முரையேன் - வயிரமே
நெஞ்சு விடு தூது > உயிரியல்பு > பாடல்: 2 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL