திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும் கணவற்கும் தோன்றாத கற்பு. | பலரைப் புணர்ந்து மிருட் பாவைக்குண் டென்றுங் கணவற்குந் தோன்றாத கற்பு. |
| பொருள் : அக இருளாகிய பெண் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு சேர்ந்திருப்பவள். ஆயினும், அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தன் உண்மை யியல்பை அவள் என்றுமே காட்டிக் கொள்ளமாட்டாள்; தன்னைச் சிறந்தவளாகவே காட்டி நிற்பாள். | |