திருமந்திரம் | Thirumanthiram | #1014

திருமந்திரம் | Thirumanthiram

தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 12

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 3. அருச்சனை > பாடல்: 1014

Centers
Yoga its consummation reaches
In Nectar's flow in Center Seventh;
In the Eighth is revealed the Jnana Light;
Then beyond in the Eleventh
In Paraparam the Supreme;
Then beyond, beyond is Void,
The Dvadasanda Space Infinite.

`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026