திருமந்திரம் | Thirumanthiram

ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளியிவ் வகையே

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 15 ஆயுள் பரிட்சை > பாடல்: 774

If Prana flows outward
To matra six in length,
Eighty the age you live up to;
If seven, sixty;
These two know clearly.

பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Apr 23, 2026