திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full |
| பாடல் எண் | பாடல் | Verse | |
|---|---|---|---|
| 0 | |||
| 1 | எழுதி, சரி பார்த்து, கற்று, கண்டு, அதன் படி நிற்றல் எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப் பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை. தனிப்பாடல் திரட்டு > கற்றல் > பாடல்: 1 | ||
| 2 | பல பசுக்கள் கொண்ட ஒரு தொழுவினில் ஒரு கன்றானது எப்படி தன் தாயைக் கண்டு அணுகுமோ, அதுபோல நம் வினை! பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில் பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில் எல்லாரும் செய்வினை யாலே. சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > வினை > பாடல்: 2 | ||
| 3 | நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையது தூது மதுரை துவரை கடையிடைமுன் ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ நகர்ஆ யிழையார் நகை. தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3 | ||
| 4 | கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் யார்? அண்டின பேரைக் கெடுப்போரும் ஒன்றுபத் தாய்முடிந்து குண்டணி சொல்லும் குடோரிகளும் கொலையே நிதம்செய் வண்டரைச் சேர்த்து இன்ப சல்லாபம் பேசும்மறையவரும் சண்டிப் பயல்களுமே கலிகாலத்தில் தாட்டிகரே! முத்துச் சுப்பையர் தனிப்பாடல் திரட்டு > கலிகால ஆற்றல் > பாடல்: 4 | ||
| 5 | பகட்டு! விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பகட்டு! > பாடல்: 5 | ||
| 6 | யாருக்கு எது எளிது? வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > எளிது > பாடல்: 6 | ||
| 7 | எதுவும் பழக்கமே! சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பழக்கம் > பாடல்: 7 | ||
| 8 | கற்றதனால் ஆய பயனென்? காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > கற்றோர் முன் கவனம் தேவை > பாடல்: 8 | ||
| 9 | அழகு எதில்? சுரதந் தனில் இளைத்த தோகை ; சுகிர்த விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம் கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல் அபிரா மம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அழகு > பாடல்: 9 | ||
| 10 | அன்பில்லாள் இட்ட அமுது. காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென் என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ அன்பில்லாள் இட்ட அமுது. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அன்பிலாமை > பாடல்: 10 | ||
| 11 | சந்நியாசம் கொள்வது எப்போது? பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும் ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற் கூறாமற் சந்நியாசம் கொள். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > சந்நியாசம் > பாடல்: 11 |
| பாடல் எண் | பாடல் | Verse | |
|---|---|---|---|
| 12 | அமுது வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ் செறியாதோ கைக்கு. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அமுது > பாடல்: 12 | ||
| 13 | பொன்மாரி பெய்க கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும் வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப் பொன்மாரி யாகப் பொழி. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பாரி மகளிர் > பாடல்: 13 | ||
| 0 | |||
| 14 | நன்று எது? ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில் பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா வங்கணத்தின் நன்று வலிய பகை வாழ்விலாச் சங்கடத்தில் சாதலே நன்று. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > நன்று > பாடல்: 14 |