பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | full

பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | full
பாடல் எண் பாடல் Verse
0 அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
'பெரியதன் ஆவி பெரிது.'

பழமொழி நானூறு > கடவுள் வணக்கம் > பாடல்: 0

1 ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 1

2 சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 2

3 விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை
'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 3

4 ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 4

5 உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும்
கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
'கற்றலின் கேட்டலே நன்று'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 5

6 உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 6

7 புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
'பாம்பறியும் பாம்பின் கால்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 7

8 நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 8

9 சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 9

10 விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
'மதிப்புறத்துப் பட்ட மறு'.

பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 10

மொத்த பாடல்கள்: 399

more to come .....

முன்   முகப்பு