அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | மன்னுதிரு அண்ணா மலைமாலை நாயடியேன் பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப் பாதனே மூடிகத்தின் பாலேறும் தேவகண நாதனே நீமுன் நட அண்ணாமலை வெண்பா > காப்பு > பாடல்: 0 | |
| 1 | ஆதிநடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை - நீதி தழைக்குமலை ஞானத் தபோதனரை வாஎன்று அழைக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 1 | |
| 2 | அன்பர் பிறப்பை அகற்றுமலை அன்பரல்லா வன்பர் பிறப்பை வளர்க்குமலை - அன்பை வடிக்குமலை சிங்கத்தை வந்துசிம்புள் ஆகி அடிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 2 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 3 | கூற்றை உதைத்தமலை கோமாறன் கூடல்வைகை ஆற்றை அடைத்தமலை ஆரூரன் - போற்றச் சிறந்தமலை தீவினையேன் செய்தகுறை எல்லாம் மறந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 3 | |
| 4 | ஏழைக்கு இரங்குமலை ஏதேது கேட்டாலும் கோழைப் படாமல் கொடுக்குமலை - வேழம் உரித்தமலை அம்மைக்கு ஒருபாகம் ஈந்த மருந்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 4 | |