சிவஞானபோதம் | Siva Gnana Botham | full |
| 0 | தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை உடைமை எமை இகழார்--- தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில் புணராமை கேளாம் புறன் சிவஞானபோதம் > 1.3 அவையடக்கம் > பாடல்: 0
| |
| 1 | அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.1 முதல் சூத்திரம் > பாடல்: 1
| |
| 2 | அவையே தானே ஆய், இரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.2 இரண்டாம் சூத்திரம் > பாடல்: 2
| |
| 3 | உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா சிவஞானபோதம் > 2. பொதுவதிகாரம்: பிரமாணவியல் > 2.3 மூன்றாம் சூத்திரம் > பாடல்: 3
| |
| 4 | அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.1 நான்காம் சூத்திரம் > பாடல்: 4
| |
| 5 | விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத் தாம்தம் உணர்வின் தமியருள் காந்தம் கண்ட பசாசத்து அவையே சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.2 ஐந்தாம் சூத்திரம் > பாடல்: 5
| |
| 6 | உணருரு அசத்து எனின் உணராது இன்மையின் இருதிறன் அல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் இசைக்குமன் உலகே சிவஞானபோதம் > 3. பொதுவதிகாரம்: இலக்கணவியல் > 3.3 ஆறாம் சூத்திரம் > பாடல்: 6
| |
| 7 | யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின் சத்தே யறியாது அசத்துஇலது அறியா இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.1 ஏழாம் சூத்திரம் > பாடல்: 7
| |
திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar | full | 8 | ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.2 எட்டாம் சூத்திரம் > பாடல்: 8
| |
| 9 | ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.3 ஒன்பதாம் சூத்திரம் > பாடல்: 9
| |
| 10 | அவனே தானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.1 பத்தாம் சூத்திரம் > பாடல்: 10
| |
| 11 | காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.2 பதினொறாம் சூத்திரம் > பாடல்: 11
| |
| 12 | செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தாமும் அரன் எனத் தொழுமே சிவஞானபோதம் > 5. உண்மை அதிகாரம்: பயனியல் > 5.3 பனிரண்டாம் சூத்திரம் > பாடல்: 12
| |
மொத்த பாடல்கள்: 101 முன் முகப்பு