பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப் 'பெரியதன் ஆவி பெரிது.' பழமொழி நானூறு > கடவுள் வணக்கம் > பாடல்: 0 | |
| 1 | ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச் 'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை மரம்போக்கிக் கூலிகொண் டார்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 1 | |
| 2 | சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக் கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல் 'கற்றொறுந்தான் கல்லாத வாறு'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 2 | |
| 3 | விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை 'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 3 | |
| 4 | ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால் 'ஆற்றுணா வேண்டுவ தில்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 4 | |
| 5 | உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும் கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக் 'கற்றலின் கேட்டலே நன்று'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 5 | |
| 6 | உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை கல்லாமல் பாகம் படும்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 6 | |
| 7 | புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே 'பாம்பறியும் பாம்பின் கால்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 7 | |
| 8 | நல்லார் நலத்தை உணரின் அவரினும் நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும் 'அயிலாலே போழ்ப அயில்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 8 | |
| 9 | சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற அறைகல் அருவி அணிமலை நாட! 'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 9 | |
| 10 | விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார் கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப் பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் 'மதிப்புறத்துப் பட்ட மறு'. பழமொழி நானூறு > 1. கல்வி > பாடல்: 10 |