வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2386
In the imprint of Vedanta and Siddhanta, There is difference none; Bodhanta is Jnana (Divine Knowledge); Yoganta is Jneya (the Known) Nadanta is Dawning of Bliss The finale imprint Is in Silentness (Mauna) Immersed-to-be.
ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத்தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திரு வருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையைப் பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.