சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2393
Path to Siva-Becoming Siva-Becoming Is the goal of Vedanta and Siddhanta The rest four Ends lead not to Siva-Becoming, --Siva that is Sadasiva-- And so it is that Vedanta and Siddhanta Are wondrous Ways indeed.
ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.