சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2394
In Siddhanta is attained Jivan Mukti (Liberation in this body); Those who stood in Siddhanta Have verily reached the Mukti State; As Siddhanta-Vedanta Leads to the Goal of Siva-Becoming, Siddhanta-Vedanta Is the Path Exalted.
ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.