தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2396
The Form and Formless States Are alike Tattvas; The Bindu, Nada and Sadasiva too Are Tattvas verily; So too is Jiva's (Tvam Pada and Tat Pada); Tattva truly is where Tatpara is in Siva-Sayujya.
சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.