ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2399
Kalanta and Nadanta Are Ends (goals) two; As they are reached The five Kalas (of Siva Tattva) are attained; So the Lord that arises there Is as Panchantaka known Thus He spake in Vedas and Agamas.
ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.