அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2400
and to Dance-Bliss Wait not for the day To vision the Five Kalantas; Take to the Way of Vedanta-Siddhanta, that one are; Then will you reach the Yoganta, And there will you envision the Feet Of the Eternal Dancer, That is Siva.
வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.