திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 17. அடிதலை அறியும் திறங்கூறல் > பாடல்: 2430
The Lord's Holy Feet In your thoughts hold; His flower-like Feet In wisdom adore; The Lord who carries Sakti on His body With Ganga muffled in his russet matted locks Will in time your salvation grant; Do wait and pray.
பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.