திருமந்திரம் | Thirumanthiram

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த ..பரிசறி யாதே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 12 மறைத்தல் > பாடல்: 433

With Hara, Hari and Brahma assembling
The Primal Lord fashioned this body,
The subtle organs of sense built-in;
Why the Holy One did it,
The three know not the mystery.

`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, Jun 03, 2026