திருமந்திரம் | Thirumanthiram

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 17 அபாத்திரம். > பாடல்: 506

Give only unto those
Who follow the way of Yoga, Iyama, and Niyama,
And who adore Lord, in constancy abiding;
To give those who have no love for God,
A heinous crime, indeed it is.

பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Sep 26, 2026