முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji |
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
91 ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
92 வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
93 கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
94 நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
95 வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
96 மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
97 இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
98 துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
99 ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
100 காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.
முதுமொழிக் காஞ்சி > தண்டாப் பத்து > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக