முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
81 முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று
82 மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
83 செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று
84 பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று
85 தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று
86 முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று
87 சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று
88 அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று
89 உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று
90 நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.

முதுமொழிக் காஞ்சி > நல்கூர்ந்த பத்து > பாடல்: 9

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, May 13, 2026