முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
71 புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
72 உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
73 ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
74 குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
75 துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
76 இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
77 உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
78 பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
79 பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
80 சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது

முதுமொழிக் காஞ்சி > எளிய பத்து > பாடல்: 8

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, May 13, 2026