முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
61 பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
62 பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்
63 கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்
64 காலம்அறி யாதோன் கையுறல் பொய்
65 மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்
66 உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்
67 சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்
68 பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்
69 பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்
70 வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.

முதுமொழிக் காஞ்சி > பொய்ப் பத்து > பாடல்: 7

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Wed, May 13, 2026