திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
செல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ்
சிவனளித்த மதகரிக்குச் சிந்தைகூர்ந்து
நல்லபுக ழுடையநம்பி யாண்டார்நம்பி
நண்பினொடு நிவேதிப்பான் மதுரமிக்க
எல்லையில்வா ழைக்கனிதேன் அவலோ
டப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்கஎன்றே
மல்லல்மிகு சேனையுடன் இராசராச
மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 6
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக