நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்
நெஞ்சு விடு தூது > இறைவன் பெருமை > பாடல்: 23
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக