109. மூவேந்தர் முன் கபிலர்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல். அளிதோ தானே, பாரியது பறம்பே! நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே; நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து, திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே. வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, விரையலி கூந்தல் நும் விறலியர் பின் வர, ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.
புறநானூறு > பாடல்: 109
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக