108. பறம்பும் பாரியும்! பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின், அம் புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு, பாரியும், பரிசிலர் இரப்பின், ‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.
புறநானூறு > பாடல்: 108
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக