20. மண்ணும் உண்பர்! பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர். திணை: வாகை. துறை: அரச வாகை. இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே; திருவில் அல்லது கொலைவில் அறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப் பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, பகைவர் உண்ணா அருமண் ணினையே; அம்பு துஞ்சும்கடி அரணால், அறம் துஞ்சும் செங்கோலையே; புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், விதுப்புற அறியா ஏமக் காப்பினை; அனையை ஆகல் மாறே, மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.
புறநானூறு > பாடல்: 20
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக