247. பேரஞர்க் கண்ணள்! பாடியவர்: மதுரைப் பேராலவாயர் திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள் யானை தந்த முளிமர விறகின் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து; மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி, மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப், பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித், தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன் முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச் சிறுநனி தமியள் ஆயினும், இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!
புறநானூறு > பாடல்: 247
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக